ஆசிரியர் : முனைவர் இரா. கவிதா செந்தில்நாதன், முனைவர் சீ.மாலினி, முனைவர் அர. ஜோதிமணி மற்றும் திருமதி.பூங்கொடி துரைசாமி
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 90ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் அசிஸ்ட்டு உலக சாதனை மையத்துடன் இணைந்து ஆகஸ்ட் 27 முதல் அக்டோபர் 15, 2021 வரை, 2021 மணிநேரத் தொடர் இணையவழி நிகழ்வாக “பன்னாட்டுச் சாதனைச் சங்கமம்” நடைபெற்றது.
உலக சாதனை மையத்தின் மாபெரும் சாதனை நிகழ்விற்குள், “90 தமிழ்ச் சான்றோர்கள் 90 தமிழ் ஆளுமைகள்” என்பதை மையமாகக் கொண்ட “பன்னாட்டுக் கருத்தரங்கம்” நடத்தப்பட்டது.
தமிழார்வலர்களின் ஆழமான ஆராய்ச்சியை, பங்களிப்புகளை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் பல்வேறு நிலைகளில் தமிழ் மொழியை ஆராய்வதற்கு இது ஒரு தளத்தை வழங்கியுள்ளது. செழுமையான தமிழ் பாரம்பரியத்தின் மீது அதிக புரிதலையும் பாராட்டையும் வளர்த்துள்ளது. தமிழ் மொழி, அதன் கலாச்சாரத்தை அசைக்க முடியாத நிலைப்பாட்டிற்கு, இந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
90 தமிழ்ச் சான்றோர்களைக் குறித்து 90 தமிழ் ஆளுமைகள் வழங்கிய ஆய்வுக்கு கட்டுரைகள் பன்னாட்டு ஆய்வுக் கோவையாக மலர்ந்துள்ளது. இதில் 75 கட்டுரைகள் முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ஒரே நூலில் 75 தமிழ்ச் சான்றோர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம் என்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.